தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால் கச்சத்தீவு பிரச்னை - ஜவாஹிருல்லா

தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால் கச்சத்தீவு பிரச்னை - ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா 

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவு பிரச்னையை பேசுகிறார் என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையத்தில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு ஆலை வீசுகிறது. தமிழ்நாட்டுக்கு மோடி ஏறத்தாழ ஆறு முறை வந்துவிட்டார். தமிழ்நாட்டைச் சுற்றி அவருடைய எண்ணங்கள் இருக்கின்றன. அதனால்தான் அவர் கச்சத்தீவு பிரச்னையை எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தபோது கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசவில்லை. இப்போது அதைப் பற்றி பேசுகிறார் என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்ற முடிவுக்கு மோடியே வந்துவிட்டார். எனவே தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்" என்றார்.

Tags

Next Story