கலைஞர் உலகம்: பொதுமக்கள் இலவசமாக காண இணையதளம் அறிமுகம்

கலைஞர் உலகம்: பொதுமக்கள் இலவசமாக காண இணையதளம் அறிமுகம்

கலைஞர் உலகம்

கலைஞர் உலகத்தை பார்வையிட அரசு சார்பில் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது இலவச அனுமதி சீட்டினை பதிவு செய்து பெற்று, மார்ச் ஆறாம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.

கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் 6-3-2024 புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. கலைஞர் நினைவிடத்தை பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் https://www.kalaignarulagam.org (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து , கட்டணமில்லா அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு கலைஞர் உலகத்திற்குள் அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள். காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும்.

கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story