கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் - மு.க.ஸ்டாலின் கடிதம்
நினைவு நாணயம்
கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கலைஞருடைய நூறு ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடக்கூடிய ஒன்றிய அரசுக்கு தன்னுடைய நன்றி. மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் அனைவரையும் அழைக்கிறேன். இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான கலைஞரின் உருவம் பொறித்த ₹100 நாணயத்தினை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவது பெருமை '' என தெரிவித்துள்ளார்.