கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

கலாஷேத்ரா  முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க முன்னாள் மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க முன்னாள் மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995 - 2001 வரை படித்த மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த புகாரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் வழங்க முன்னாள் மாணவி எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய அனுமதி . விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் . 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், தற்போது புகார் அளிக்கப்பட்டு கைது என ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு தகவல். இந்த விவகாரத்தில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள் என பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story