கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் : எஸ்பி சஸ்பெண்ட் - சிபிசிஐடி விசாரணை

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவரது பொறுப்பிற்கு ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர். மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வழக்கினை மேல்நடவடிக்கைக்காகவும். ஆணையிட்டுள்ளார்கள் தீர விசாரிக்கவும். தக்க உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Tags

Next Story