ஸ்டாலினின் கொத்தடிமையாக கமல்ஹாசன் உள்ளார் - செல்லூர் ராஜூ
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக விருப்ப மனு பெற்றவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இன்று மதியம் மதுரை தொகுதிக்கு நேர்காணல் முடிந்த பின், செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட நிர்வாகிகள் போட்டி போட்டு மனு கட்டியுள்ளனர். கள நிலவரம் நன்றாக இருப்பதால் தான் கட்டியுள்ளனர், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
கூட்டணி பற்றி நாங்கள் யாரும் கவலைப்படவில்லை.அண்ணா திமுக தலைமை நம்பி தான் கட்டியுள்ளனர். அமைச்சர் ரகுபதி அதிமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று பேசியது தொடர்பான கேள்விக்கு, 2006 ஆம் ஆண்டு தான் ஜாபர் சாதிக் அவருடைய தொழிலையே தொடங்குகிறார். 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் ஆட்சியில் நான்கு கம்பெனியில் தொடங்குகிறார். இதன் மூலம் மறைமுகமாக போதை பொருளை கடத்தி வருகிறார். இதனை தமிழக காவல்துறையும் கண்டுபிடிக்கவில்லை மத்திய காவல்துறையும் கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாடு போதை களமாக மாறிவிட்டது. திமுக தொடர்போடு அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார் பல்லாயிரம் கோடி சம்பாதித்து இருக்கிறார்.ரகுபதி இருக்கும் இடத்திற்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும் என்று விசுவாசமாக இருக்க பூசி முழுகுகிறார். நம் எதிர்கால இளைய சமுதாயத்தினர் வாழ்வு பாழாகிறது. இந்த ஆட்சியை விரைவாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அப்போதுதான் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம்.
தொடர்ந்து, மோடிஜி வந்தால்தான் பாஜக தெரிகிறது, அப்படி தலைமையே இல்லை. இந்தியாவை வழிநடத்தும் அகில இந்திய கட்சிகள் தலைவருக்கு கூட்டம் கூட தான் செய்யும், யார் என்று தெரியவில்லை என்றாலும் கூட்டம் கூடும். அண்ணா திமுக எல்லா கிராமங்களிலும் பரந்து விரிந்துள்ளோம், தமிழகத்தில் வேரூன்றி உள்ளோம்.கூட்டணி தோழமை கட்சிகள் கேட்கும் இடங்கள் வேண்டும் என்பதற்காக மற்ற கட்சிகளையும் சென்று பார்ப்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவை வெறுத்து ஒதுக்க நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் உயர்த்த இது சரியான நேரம் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த கூட்டணியில் எந்த கட்சி சேர்ந்தாலும் கவலை இல்லை.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையக் கட்சித் தலைவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, கமல்ஹாசன் உலக நாயகன், அரசியலில் பூஜ்ஜியம் வடிவேலை காட்டிலும் சிரிப்பு நடிகர் ஆக மாறிவிட்டார், வாயை வாடகைக்கு விட்டிருந்தால் ஒரு தகுதியாவது வென்றிருக்கலாம். எப்போது வரும் ராஜ்ய சபா தொகுதிக்கு இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டு உள்ளார். இந்த பொழப்புக்கு இன்னும் இரண்டு படத்தில் நடித்து இருக்கலாம். இவரை நம்பி சென்றவர்கள் நொந்து நூலாகி விட்டனர். மோசமானவர் கமல்ஹாசன். ஸ்டாலினுடைய கொத்தடிமைகளில் முதன்மையான அடிமையாக கமல்ஹாசன் இருக்கிறார் என்றார்.