மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் - கனிமொழி குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் - கனிமொழி குற்றச்சாட்டு
பிரச்சாரம்
திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய சரித்திரத்திலேயே மோடி ஆட்சியில் தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது என கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி (07/04/2024) தனக்கு ஆதரவாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உதிரமாடன் குடியிருப்பு ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்திய சரித்திரத்திலேயே மோடி ஆட்சியில் தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து, அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொல்லி வந்த பின்னர் உங்கள் அக்கவுண்ட்ல் இருக்கும் காசையும் எடுத்துக் கொண்டனர். கேஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கவில்லை, பாஜக ஆட்சிக்கு வந்தபோது கேஸ் சிலிண்டர் விலை 410 தற்போது ரூபாய் 1000 மேலே உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம். சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மோடி வீடு வழங்கும் திட்டம் என்க சொல்லி, அதற்குக் கால்வாசி நிதி மட்டும்தான் ஒன்றிய பாஜக தருகிறது, மீதமுள்ள முக்கால்வாசி நிதி வழங்குவது தமிழ்நாடு அரசு . நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது 1 ரூபாய் கூட நிதியாக வழங்காத ஒன்றிய அரசு. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்குத் வழங்கப்படுகிறது, சில பேருக்கு விடுபட்டிருந்தால் தேர்தல் முடிந்ததும் முகாம் அமைத்து அவர்களுக்கும் கொடுக்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் ரூபாய் அடித்தட்டு மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் இந்த பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கனிமொழி உறுதியளித்தார்.

Tags

Next Story