தாய் வீடாக உணர்கிறேன் : கனிமொழி உருக்கமாக பிரச்சாரம்

தாய் வீடாக உணர்கிறேன் :  கனிமொழி உருக்கமாக பிரச்சாரம்
தூத்துக்குடியை எனது இரண்டாவது தாய் வீடாக உணர்கிறேன், நம்மை யார் வீழ்த்த நினைத்தாலும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தூத்துக்குடியில் நடந்த முதல் பிரச்சார நிகழ்ச்சியில் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி திமுக பாராளுமன்ற வேட்பாளராக கனிமொழி தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து தூத்துக்குடியில் தனது முதல் பிரச்சார பயணத்தை தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் எதிரே உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்போது அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கனிமொழி கருணாநிதி மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோது தூத்துக்குடியை எட்டி பார்க்காத மோடி அடிக்கடி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார் இவர் எத்தனை முறை வந்தாலும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

காலை உணவு திட்டத்தை மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாகவும் கூறினார். யார் நம்மை வீழ்த்த நினைத்தாலும் இந்த தேர்தலில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பேசிய கனிமொழி தூத்துக்குடி முழுவதும் 24 இடங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

Tags

Read MoreRead Less
Next Story