கனிமொழி வெற்றி: அமைச்சர்கள் மேயர் வாழ்த்துக்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் மேயர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார் அவர் சுமார் 3.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story