விபத்தில் சிக்கிய மாணவர் - மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய கனிமொழி
சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கனிமொழி
திருப்பூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மாணவரை அந்த வழியாக சென்ற கனிமொழி எம்.பி மீட்டு கட்சி நிர்வாகியின் காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோவை:திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது லாரி மோதியதில் படுகாயம் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் இளைஞர் ஒருவரை கண்ட கனிமொழி எம்.பி.ஆம்புலன்ஸ் வர தாமதமான காரணத்தால் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.காயமடைந்த மாணவன் பெயர் ராபின் என்பதும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருவதும் அவர் அணிந்திருந்த அடையாள அட்டை மூலம் தெரியவந்தது.பின்னர் மாணவர் அனுமதிக்கபட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி. மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கூறினார்.
Next Story