கன்னியாகுமரியில் இருந்து காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை துவக்கம்

கன்னியாகுமரியில் இருந்து காசி தமிழ் சங்கமம்  ரயில் சேவை துவக்கம்
தமிழ் சங்கமம் ரயில் துவக்கம் .
துவக்க நிகழ்ச்சியில் ரயில் நிலைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி பனாரஸ் வாராந்திர ரயிலின் நிரந்தர சேவை கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்தும், வாரணாசி ரயில் நிலையத்திலிருந்தும் நேற்று தொடங்கியது. ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கன்னியாவிலிருந்து மாலை ஐந்து முப்பது மணிக்கு புறப்படுகின்ற ரயிலுக்கு நாகர்கோவில்,திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பூர் நிறுத்தங்களை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலின் நிரந்தர சேவை கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 28ஆம் தேதி முதல் வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இதற்காக நடந்த துவக்க நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் சர்மா, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, பாரதி ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் ஐயப்பன், சுபாஷ், இக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story