அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றம்

கொடியேற்றம் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடி மரத்தில், சுக்லபட்சம், சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம், சித்தயோகத்தில், அதிகாலை கொடியேற்றம் நடந்தது.

Tags

Next Story