கலைஞர் நூற்றாண்டு விழா: துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழா: துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு
X

 ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார். 

ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.

மாணவர்கள் பொறியாளர்கள் மருத்துவராக வந்தால் மட்டும் போதாது அரசியலுக்கு வந்து நல்ல அரசியல் தலைவர்களாக மக்கள் பணியாற்ற வேண்டும் - சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பேச்சு.

வேலூர்மாவட்டம்,ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது . இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டார். இதில் கருத்தரங்கில் பேச்சு போட்டி நடந்தது.

இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு சாதனைகள் குறித்து மாணவ,மாணவிகள் விளக்கி பேசினார்கள். இதே போன்று காட்பாடி அரசினர் ஆண்கள் பள்ளியிலும் விழா நடந்தது இதிலும் மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்றனர் . கல்லூரி மற்றும் பள்ளியில் நடந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழையும் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கி விழாவில் பேசுகையில், கலைஞர் கருணாநிதி பல சமூக சிந்தனையுடன் நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார். அந்த வகையில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தையும் அவர்தான் நிறைவேற்றினார் இதே போல பல மக்கள் நல திட்டங்கள் எல்லாம் கலைஞரால் கொண்டுவரப்பட்டது. மாணவர்கள் நீங்கள் படித்துவிட்டு பொறியாளர் மருத்துவராக ஆனால் மட்டும்போதாது அரசியலுக்கு வரவேண்டும் . நல்ல அரசியல் தலைவர்களாக மக்கள் பணியாற்றிட வேண்டுமென அவர் பேசினார்

Tags

Next Story