அதிமுகவை ஏமாற்றிய எஸ்.பி வேலுமணி.. கோவையை விட்டுக் கொடுத்து அண்ணாமலையுடன் நாடகம்.! பகிரங்கமாக தாக்கிய ஜோதிமணி!

அதிமுகவை ஏமாற்றிய எஸ்.பி வேலுமணி..  கோவையை விட்டுக் கொடுத்து அண்ணாமலையுடன் நாடகம்.! பகிரங்கமாக தாக்கிய ஜோதிமணி!

ஜோதிமணி

அதிமுக நிர்வாகிகளை ஏமாற்றி எஸ்.பி வேலுமணி அண்ணாமலையுடன் சேர்ந்து நாடகமாடி கோவையை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததாக கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அதிரடி கிளப்பியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும் அந்தத் தொகுதியில் பாஜக, அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது. அதே தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அதிமுகவின் கோட்டையான கோவையில் நிலையாக இருந்த 32 சதவீத வாக்குகள் சரிந்து 17 சதவீதமாக மாறியது.

கடந்த முறை கோவையில் போட்டியிட்ட 10 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வென்றது. தற்போது மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் நிலையில் கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து தான் அதிமுக களத்தை விட்டுக் கொடுத்ததாகவும், அதிமுக நிர்வாகிகளை ஏமாற்றி எஸ் பி வேலுமணியும் அண்ணாமலையும் நடத்தியது நாடகம் என்றும் கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், " இந்த தேர்தலில் பாஜகவும் மோடியும் ஆட்சி அமைக்க கூடாது என்று தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதனால் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரக் கூடாது.

மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்த மோடி தார்மீக அடிப்படையில் பதவியேற்கக் கூடாது. இது பாஜக ஆட்சி இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பெருமிதம் பேசிக் கொள்ளும் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவையில் இடம் கேட்டு அடம்பிடித்து வருவதாக தெரிகிறது.

கோவையில் எஸ் பி வேலுமணியும் அண்ணாமலையும் நடத்தி வரும் நாடகம் அதிமுக நிர்வாகிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது.

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவே எஸ் பி வேலுமணி அண்ணாமலைக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அண்ணாமலை வாங்கிய வாக்குகள் பாஜகவின் வாக்குகள் அல்ல. அது அதிமுகவின் வாக்குகள் தான்." என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தாக்கியுள்ளார்.

Tags

Next Story