பண பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடை விதிக்க கேசவ விநாயகம் மனு.
பைல் படம்
தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த பண விவகாரம் குறித்த விசாரணைக்கு தடை விதிக்க பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மனு அளித்துள்ளார்.
தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகும் படி தனக்கு சம்மன் அனுப்பியதை ரத்து செய்து, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர் என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்றும் கேசவ விநாயகம் மனுவில் தெரிவித்துள்ளார். மனு விரைவில் நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வர உள்ளது.
Next Story