கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஏற்காட்டில் மீட்பு
கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஏற்காட்டில் மீட்கப்பட்டார்
கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஏற்காட்டில் மீட்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38) ரியல் எஸ்டேட் அதிபர் இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் உள்ள ரியல் எஸ்டேட் கூட்டாளி சக்திவேல் என்பவரை பார்க்க சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மேலும் அவரது மனைவியிடம் ரூபாய் 50 லட்சம் கேட்டு போன் செய்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி சம்பூர்ணம் சங்ககிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து சேலம் ஏற்காடு பகுதியில் அடைத்து வைத்திருந்த பிரபுவை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் சின்ன திருப்பதி கண்ணன் (40), அஸ்தம்பட்டி வசந்த் (25), மாபுமாஷக் (27), கார்த்தி (27), சுரேஷ் (35), பார்த்திபன் (38) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ரூபாய் 2.50 கோடி ரூபாயை கண்ணன் கடனாக பிரபுவுக்கு பெற்றுத் தந்துள்ளார். பணத்தை திரும்ப தராததால் சக்திவேல் மூலம் பிரபுவை சேலத்தில் உள்ள தனியார் பாருக்கு கண்ணன் வரவழைத்தார். அங்கு வந்தவரை கண்ணன் கூலிப்படையினர் மூலம் காரில் கடத்தி ஏற்காடு வந்து விடுதியில் அடைத்து வைத்து பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளனர். அப்போது பங்கு சந்தையில் பணத்தை போட்டு நஷ்டம் ஆகிவிட்டதாக பிரபு அவர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவரை காரில் வைத்து இடமாற்றம் செய்ய முற்பட்ட போது போலீசில் சிக்கினர்.
Tags
Next Story