கடனைத் திருப்பி தராததால் காரில் கடத்தி சித்திரவதை - 2 பேர் கைது, 3 பேருக்கு வலை

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஆன்லைன் வர்த்தகரைக் கடத்திய இருவரை கைது செய்த போலீசார் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவெண்காடு முருகேசன் மகன் கவியரசன்.37. ஆன்லைன் வர்த்தகர். இவர் தனது நண்பரான தஞ்சாவூர் பிரான்சிஸ் மகன் ஸ்டீபன் செல்வகுமார்.38. என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலு மகன் பாலகுமாரன் என்பவரிடம் வட்டிக்கு ரூ 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரூ 4 லட்சத்தை திருப்பி கொடுத்த கவியரசன் மீதி தொகையை கொடுக்காமல் இழுக்கடித்துள்ளார். இந்நிலையில் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்து கடத்திவைத்துவிட்டு கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன்செய்து, கடன் தொகையை கொடுத்துவிட்டு உன் கணவரை மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசில் அளித்த புகாரின் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த குப்புசாமி மகன் புகழேந்தி.53, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார்.38. ஆகியோர் தஞ்சாவூர் வந்த கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. போலீசார் கவியரசனை மீட்டனர். புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story