மோடி,அண்ணாமலை வாய்ஜாலத்திற்கு இந்த தேர்தலில் முடிவு - ஈஸ்வரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிர் உதவித்தொகை அனைத்து பெண்களாலும் வரவேற்கப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், சென்ற முறை 39 என்பது இந்த முறை 40 ஆக உயரும் . பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான் சொன்னது தேர்தல் முடிவில் தெரிந்து விடும், அவரின் வாய்ஜாலமெல்லாம் இந்த தேர்தலில் பலிக்காது, அதேபோன்று இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
இதேபோன்று இந்தியா முழுவதும் மோடியின் வாய்ஜாலமெல்லாம் இந்த தேர்தலோடு முடிவு கட்டிவிடும், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அவர் மக்களுக்கு ஆற்றிய நலத்திட்டங்கள் என்ன என்று அவரால் சொல்லி வாக்கு கேட்க முடியுமா, மேலும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை செய்யவில்லை என்று கூறி வருகிறார் அவரால் அதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும், கொங்கு இன மக்கள் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு தான் பெருவாரியான வாக்குகள் அளிப்பார்கள், ஏனென்றால் எடப்பாடி சொல்வது அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் இதனை தேர்தலில் மக்கள் அவருக்கு சரியான பாடம் புகுட்டுவார்கள்.பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார் என கூறினார்.
இதில் மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோபிநாத், பழனியப்பன், மாநில துணை பொது செயலாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட கமிட்டி தலைவர் அக கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, ஜேசுதுரை, மாவட்ட துணை தலைவர் ரகமதுல்லா மற்றும் ஆஜித்பாஷா, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குமரேசன், ஊத்தங்கரை வட்டார தலைவர் ரவி, நகர தலைவர் விஜயகுமார், கொநாமக மாவட்ட செயலாளர் வஜிரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.