கே பி முனுசாமி 73வது பிறந்த நாள் : தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அதிமுகவின் துணை பொது செயலாளர் கே பி முனுசாமியின் ௭வது வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது இல்லத்தில் தொண்டர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய, நகர ஊராட்சி, நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு 73 கிலோ கேக்கை வெட்டி உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மாலை மற்றும் பொண்ணாடை போற்றி இனிப்பு வழங்கி கேபி முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story