குமரி மாவட்ட  மருத்துவ மாணவி சீனாவில் உயிரிழப்பு

குமரி மாவட்ட  மருத்துவ மாணவி சீனாவில் உயிரிழப்பு

குமரி மாவட்ட  மருத்துவ மாணவி சீனாவில் உயிரிழப்பு

மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளானர்

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகள் ரோகினி (27) சீனா நாட்டில் மருத்துவ படிப்புக்காக சென்றிருந்தார். தொடர்ந்து படிப்பை முடித்துவிட்டு அவர் ஊர் திரும்ப தயாராக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி மாணவி ரோகிணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மாணவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், வெளியுறத்துறை அமைச்சர் உட்பட ஒன்றிய அமைச்சர்களுக்கு மகளின் உடலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாணவியின் பெற்றோர் அரசுகளை கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மாணவியை சீன நாட்டுக்கு அழைத்துச் சென்ற ஏஜென்சி தற்போது அவரது உடலை கொண்டு வர பல லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கூறி வருவதாக பெற்றோர் குற்றச்சாட்டுகின்றனர். 12-ம் தேதி படிப்பு முடிந்து, 13-ம் தேதி ஊர் திரும்ப இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story