தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குமரி  அரசுப்பள்ளி மாணவிகள்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குமரி  அரசுப்பள்ளி மாணவிகள்
மாணவிகளை பாராட்டிய கலெக்டர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குமரி அரசுப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நவம்பர் 25, 26 ஆம் தேதிகளில் தேசிய குழந்தைகள் அறிவியில் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் வீ.அனுலின் மற்றும் மு.மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களின் ஆய்வுக்கட்டுரை மாநில அளவில் தேர்வாகியுள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இரண்டு மாணவிகளையும் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பாராட்டினார். இந்த மாணவிகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டுமென மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளார், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story