கறியாக்குடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கறியாக்குடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கறியாக்குடல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கறியாக்குடல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கறியாக்குடல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பாலகிருஷ்ணாபுரம் சிவராமன் சுவாமிகள், கறியாக்குடல் சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நேற்று காலையில் தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களை எடுத்து சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நெமிலி, சிறுணமல்லி, புன்னை, அசநெல்லிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story