சின்னமாடன் குடியிருப்பு திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள சின்னமாடன் குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக் கோயில் நூதனகோபுரஅஷ் டபந்தன மஹா கும்பாபி ஷேக விழாவினை முன்னிட்டு முதல் நாள் காலை 6 மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் பஞ்சகவ்யம், தேவதானுக் ஞை, ஸ்ரீ மகாகணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ மகா லட்சுமி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, சுவாசின பூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு மங்கள் இசையுடன் தீர்த்தஸங்கிரஹணம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, ம்ருத்ஸங்கிரஹணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை ப்ரவேசம், முதற்கால யாகசாலை பூஜை. வேதபாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
இரண்டாவதுநாள் காலை 7 மணிக்கு மங்கள் இசையு டன் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், விசேஷ சந்தி பூதசுத்தி பாவானா அபிஷேகம், வேதிகா அர்ச்ச ணை இரண்டாம்கால யாக சாலை பூஜை காலை 11 மணிக்கு வேதபாராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், விசேஷசந்தி மூன்றாம்கால யாகசாலை பூஜையும், இரவு 8.30 மணிக்கு வேதபாரா யணம்,திரவ்யாகுதி,பூர்ணா குதி, தீபாராதனையும் இரவு 9 மணிக்கு மேல் 10 க்குள் பிரதான மூர்த்திகளுக்கு குரு ஹோரையில் யந்தர ஸ்தாபனம், ரத்ன ந்யாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மூன்றாவது நாள் காலை 5.30 மணிக்கு மங்கள் இசையுடன் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி மூர்த்திர கஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம்,தீபாராதனை, கடம்எழுந்தருள் நடைபெற் றது.காலை 8மணிக்கு மேல் 9 மணிக்குள் நூதன விமா ன கோபுர, ஸ்ரீமுத்தாரம்மன் ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீசந்தன மாரியம்மன் ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீசுடலை மாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம்,மஹா திரவ்ய அபிஷேகம் தீபாரா தனை,அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் அஜித்ராஜ் நாடார், மகேஸ் வரி அஜித்ராஜ், சுதாகர் அஜித்ராஜ் ஆலய பூசாரி உத்திரசேனன், லிங்கதுரை உட்பட கிராம மக்கள் திர ளாக கலந்து கொண்டனர். விழாவில் ஆழ்வார் சுரேஷ் குழுவினரின் நையாண்டி மேளமும்,வைகுண்டசுவாமி குழுவினரின் கோலாட்டம், ஜயப்பன் குழுவினரின் செண்டை மேளம் நடந்தது. விழாவில் நையாண்டி மேளம் முழங்க மஞ்சள் பெட்டியுடன் அம்மன் திருவீதிஉலா, முளைப்பாரி அலங்காரம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.