ஸ்டிக்கர் என்றாலே அது ஸ்டாலின் திமுக தான் - எல் முருகன் பேட்டி

ஸ்டிக்கர் என்றாலே அது ஸ்டாலின் திமுக தான் - எல் முருகன் பேட்டி

எல்.முருகன்

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2 வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் பங்கேற்று, ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ''இந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு 6000 கோடி அளவிற்கு ரயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- மைசூர் இடையே 2 வது வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார் என்றார்.

ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு பெயர் போனது திமுக ஆட்சி. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 2,70,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

அதேப்போல ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 22 கோடி பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்கார சென்னை 2.0 என தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது.

ஸ்டிக்கர் என்றாலே அது ஸ்டாலின், திமுக தான். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள், யாருக்கு பயன், யாருக்கு எதிராக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.'' என கூறினார்.

Tags

Next Story