''காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்'' செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்த எல்.முருகன்!

காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்  செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்த எல்.முருகன்!

 எல்.முருகன் 

அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். சங்கர மடம் சார்பில் வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது. அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது. அப்படியிருத்தால் தமிழ்நாட்டில் திமுகவும், கர்நாடகாவில் காங்கிரசும் எப்படி ஆட்சி அமைக்கும்? பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தகவலை பரப்பியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி வந்திருந்தால் வரவேற்கத்தக்கது.'' என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ''கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்'' என கூறியுள்ளார்.

Tags

Next Story