மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு.
மேட்டூர் அணை
தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5,132 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 4,288 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.33 அடியில் இருந்து 47.86 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 16.49 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags
Next Story