சட்டக்கல்லூரி இட மாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு - உயர்நீதிமன்றம்.

சட்டக்கல்லூரி இட மாற்றத்தால் மாணவர்கள் பாதிப்பு - உயர்நீதிமன்றம்.

உயர் நீதிமன்றம் 

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என பெயர் வைத்துவிட்டு, வேறு மாவட்டங்களில் வைத்துள்ளதால், சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்வதும், மூத்த வழக்கறிஞர்களின் விரிவுரைகளையும் கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை அரசு சட்டக் கல்லூரியை நகருக்குள் அமைக்கும் வகையில் உரிய இடத்தை தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்குகள் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என பெயர் வைத்துவிட்டு, வேறு மாவட்டங்களில் வைத்துள்ளதால், சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்வதும், மூத்த வழக்கறிஞர்களின் விரிவுரைகளையும் கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story