கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவை கண்டித்து, ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவை கண்டித்து, ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர், ஜூன்.22- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவை கண்டித்து, ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விடியா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது சம்பவம் குறித்து நடைபெறும் நீதி விசாரணையை நடத்துவதற்கு தனி நீதிபதியை தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அது போதுமானதாக இருக்காது. தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். வழக்கை சிபிசிஐடி போலிசிடம் இருந்து மாற்றி சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை அரசு நிவாரணமாக வழங்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் சேதுராமன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். .ராஜ்குமார், ஜெயராஜ், பாலமுருகன், மோகன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.முடிவில் வக்கீல் சேகர் நன்றி கூறினார்.

Tags

Next Story