இணையத்தில் வெளியான லியோ திரைப்படம் - படக்குழுவினர் அதிர்ச்சி

இணையத்தில் வெளியான லியோ திரைப்படம் - படக்குழுவினர் அதிர்ச்சி

.இணையத்தில் வெளியான லியோ

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்த நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இணையத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது‌. இதையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு மேள தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்து விஜயின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆடி பாடியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனிடையே லியோ திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருட்செலவில் பல்வேறு இடையூறுகளை கடந்து அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் திரைக்கு கொண்டுவரப்பட்ட லியோ திரைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருவது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story