லியோ திரைப்படம், குவிந்த ரசிகர்கள் - கட்டுப்பாடுகளால் குறைந்த கொண்டாட்டங்கள்

ராசிபுரத்தில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்கம் முன்பு வழக்கமான கொண்டாட்டங்கள் எதையும் பார்க்க முடியவில்லை

விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள DNC, மற்றும் தேவி தியேட்டர்களில் படம் வெளியானது. வழக்கமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களின் போது, அவரின் ரசிகர்கள் கட்-அவுட் அதிகளவில் வைப்பர். அதற்கு பாலபிஷேகம் செய்து ஆரவாரம் செய்வர். மேலும், திரைப்படம் வெளியாகும் தியேட்டர் முன்பு ரசிகர்களின் மேள, தாளத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெளியான தியேட்டர்களில் கட்-அவுட் வைக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டர் முன் பகுதியில் அதிக ஆரவாரம் இல்லாமல் காணப்பட்டது. 'லியோ' திரைப்படத்திற்கு பலத்த கட்டுப்பாடுகள் காரணமாகவே, லியோ திரைப்படத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. திரையரங்குக்குள் ரசிகர்கள் எப்போதும் போல விசில் சத்தத்துடன் ஆரவாரமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்

Tags

Read MoreRead Less
Next Story