லியோ திரைப்பட சிறப்பு காட்சி டிக்கெட் ரூ.1.10 லட்சத்திற்கு விற்பனை

லியோ திரைப்பட சிறப்பு காட்சி டிக்கெட் ரூ.1.10 லட்சத்திற்கு விற்பனை

லியோ திரைப்படம் 

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று முன்தினம் தமிழகத்தில் வெளியானது . இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் காலை முதல் காட்சி ரசிகர்கள் ஷேவாக திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கியுள்ளார். நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர்.
Tags

Read MoreRead Less
Next Story