தூனேரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

தூனேரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி, தூனேரி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி, தூனேரி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் உணவு தேடி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அவ்வாறு குடியிருப்பு பகுதியின் அருகே உலா வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள தூனேரி கிராமத்தில் இரவு நேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பின் அருகே உலா வந்தது. குடியிருப்பு பகுதியில் உணவு தேடி சிறுத்தை சாதாரணமாக உலா வரும் காட்சி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது சிறுத்தை உலா வந்தது தெரியவந்தது. சிறுத்தையால் மனித விலங்கு எதிர்கொளள் ஏற்படுவதற்கு முன் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story