வெறிச்சோடி இருக்கும் சேப்பாக்கம் மைதானம்

வெறிச்சோடி இருக்கும் சேப்பாக்கம் மைதானம்
வெறிசோடிய சேப்பாக்கம் 
ரசிகர் வருகை குறைவால் சேப்பாக்கம் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
இறுதி போட்டிக்குள் நுழைவதற்கான தகுதி சுற்று இரண்டு போட்டி SRH - RR அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. வழக்கமாக சேப்பாக்கம் மைதானத்தில் சி எஸ் கே போட்டி நடைபெறும் நாட்களில் 7:30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு 2:30 மணியில் இருந்தே ரசிகர்கள் நுழைவுவாயில்களில் குவிய தொடங்குவர், அப்போது மைதானம் சுற்றி ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் சொற்ப எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் இருக்கின்றனர் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும்

Tags

Next Story