ஹைட்ரோகாரபன் திட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தை காப்போம்

ஹைட்ரோகாரபன் திட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தை காப்போம்

ஜெயராமன்


அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி மறுத்து, முன்னமே சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விண்ணப்பம் மறுக்கப்பட்ட செய்தியை அறிவித்தார். தமிழ்நாடு அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகள் இவை. இந்நிலையில், இப்போது அரியலூர் மாவட்டத்தில் எப்படியாவது பத்து ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைத்து விட வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவதற்கு, டில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றிருக்கிறது.

ஒரு மாநில அரசே அனுமதி மறுத்துவிட்ட நிலையில் அதையும் மீறி மக்களிடம் கருத்து கேட்பு என்ன வேண்டி கிடக்கிறது? "ஊரே அழிந்தாலும் பரவாயில்லை; தங்களுக்குக் காசு கிடைத்தால் போதும்" என்ற பிணந்தின்னி மனப்பான்மையுடன் சிலர் ஓஎன்ஜிசிக்கு ஆளாக இருந்து ஹைட்ரோகார்பன் நாசகார திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி வருவது வேதனையைத் தருகிறது.

உள்ளூர் தலைவர்கள் ஓஎன்ஜிசி -யிடம் பணம் பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். நிலத்தடி நீரும், மக்கள் உடல் நிலையும் சீர்கேடடைந்து, தங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நோயாளிகளாக மாறி,இப்பகுதியே மக்கள் வாழ முடியாத நிலப்பரப்பாக மாறுவதில் இவர்களுக்கு சம்மதம்தானா? மக்கள் இதை அவசியம் கவனத்தில் கொண்டு, முறையாகத் தடுத்து நிறுத்தி, அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story