19 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் பாஜக

19 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் பாஜக

பாஜக 

மக்களவைத் தேர்தலில் பாஜக 19 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் மீதமுள்ள தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை ,மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர் ,சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ,கன்னியாகுமரி

புதிய நீதிக் கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஶ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளது.

Tags

Next Story