சேலம் : லாரி டிரைவர் மர்மசாவு - காவல்துறையினர் விசாரணை

சேலம் : லாரி டிரைவர் மர்மசாவு - காவல்துறையினர் விசாரணை
X
லாரி டிரைவர் மர்ம சாவு
மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட நாயனாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது36). லாரி டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நிஷா என்கிற பாத்திமாவை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நேற்று அசேன் அவரது வீட்டில் சுயநினைவு இன்றி கிடப்பதாக குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் அங்கு சென்று அசேனை பரிசோதித்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அசேனின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீசார் அசேனின் உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசேனின் மர்மசாவு குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story