மீண்டும் குறைந்த தங்கம் விலை! பொதுமக்கள் குஷி !

மீண்டும் குறைந்த தங்கம் விலை! பொதுமக்கள் குஷி !

தங்கம் 

மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலை மீதான சுங்கவரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் 4ஆவது நாளாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து ரூ 6415 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ 89 க்கு விற்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

Tags

Next Story