திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பாடலாசிரியர் சினேகன் தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பாடலாசிரியர் சினேகன் தேர்தல் பிரச்சாரம்!

 பிரச்சாரம்

இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என மோடி நினைக்கிறார் பாடலாசிரியர் சிநேகன் கடும் தாக்கு. திருப்பூர், அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என மோடி நினைக்கிறார் என்று பாடலாசிரியர் சிநேகன் பேசினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருப்பூர் பாண்டியன்நகர் மற்றும் பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக பாடலாசிரியர் சிநேகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:& பிரதமர் நரேந்திர மோடி தேவதூதர் போன்று விமானத்தில் வருகிறார். எங்கு எல்லாம் ஆட்கள் இருக்கிறதோ? அங் கு அரை கிலோ மீட்டர் ரோடு ஷோ என்ற பெயரில் நடந்து செல்கிறார். அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார். தமிழகத்தில் மழை வெள்ளம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்த போது பிரதமர் ஏன் வரவில்லை? தற்போது 8 தடவை தமிழகத்திற்கு வருகிறார். தமிழகம் மீதும் தமிழர்கள் மீது பற்று கொண்டதாக பிரதமர் ஊரை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் செல்லும் போது தமிழ் மொழியின் பெருகை குறித்து தெரிவிப்பதாக கூறுகிறார். செம்மொழி தமிழ் அதன் வளர்ச்சிக்கு மோடி ஒதுக்கிய நிதி ரூ.74 கோடி, ஆனால் சமஸ்கிருதத்திற்கு ரூ.1,488 கோடி ஒதுக்கியிருக்கிறார். தமிழகத்தில் தோசை, இட்லி பிடிக்கும் என தெரிவிக்கும் மோடி அரிசிக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளார். ஆனால் கோதுமைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. மோடி பேசும் தமிழ் புரியவில்லை. பல்லடத்தில் நடந்த மாநாட்டில் மோடி பேசும் போது, வட இந்தியர்கள் கை தட்டினர். அதனை தமிழில் மொழி பெயர்க்கும் போது யாரும் கை தட்டவில்லை. மாநாட்டில் இருந்தது இங்குள்ள தொழிலாளர்கள் அவர்களுக்கு இந்தி தெரிந்ததால் கை தட்டினர். தமிழில் மொழி பெயர்க்கும் போது அவர்களுக்கு தெரியாததால் கை தட்டவில்லை. வட இந்தியர்கள் எங்களுக்கு எதிரி அல்ல. வட இந்தியர்களின் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் ஊரில் நீங்கள் பிழைக்க முடியாமல் இங்கு வந்ததற்கு காரணம் மோடி. பா.ஜனதாவினர் 10 ஆண்டுகள் ஆட்சி டிரெய்லர் என்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை போன்றவை உயர்ந்துள்ளது. டிரெய்லரே இப்படி இருந்தால், மெயின் பிச்சர் எப்படி இருக்கும். பாண்டு ரங்கனுக்கு பிடித்த தாமரை பூ என்கிறார்கள். பாட்டாளிகளுக்கு பிடிக்காத பூ தாமரை. தெய்வத்தின் முன் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார் அண்ணாமலை. ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உள்ளது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாது. ஆட்டுக்குட்டி அடுத்த வீட்டில் எட்டி பார்க்காது? அடுத்தவரை குறை சொல்லாது? ஆட்டு குட்டி மீது மதிப்புள்ளதால் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று இனி கூறமாட்டோம். எங்களது தலைவரை விமர்சித்து மூளையை பற்றி பேசும் அண்ணாமலைக்கு மூளை இருக்க வேண்டும். கோவையில் வெயில் அதிகரிக்க தி.மு.க. காரணம் என்றார். இது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. தி.மு.க. ஆட்சியில் வெயில் அதிகரிக்குமா? அண்ணாமலை மூளையை கண்டு அனைவரும் வியந்து போய்விட்டனர். இன்னொருமுறை எங்களது தலைவர்களை தரக்குறைவாக பேசினால், நாங்களுக்கும் தரைக்குறைவாக பேசிவோம். எங்களது தலைவர் உலகநாயகன், உங்களை போன்று மூளை இல்லாதவர் அல்ல. காக்கி சட்டையை கழற்றி விட்டு, காவி சட்டை போட்டுக்கொண்டு, காக்கி சட்டை போட்டவர் போல் நடந்து கொள்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story