துணைவேந்தர் இல்லாமல் செயல்படும் சென்னை பல்கலைகழகம் - நீதிபதிகள் அதிருப்தி
சென்னை பல்கலைகழகம்
கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுகிறது. இது மோசமான நிலை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அதிகாரிகள் இடையிலான பிரச்சனை காரணமாக மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் வழக்கு தொடர்ந்திருந்தார், இறுதி விசாரணைக்காக வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
Next Story