பெட்ரோ மாற்று வருவாய் ஈட்ட முடிவு

பெட்ரோ மாற்று வருவாய் ஈட்ட முடிவு

மெட்ரோ ரயில் 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் (மெட்ரோ இரயில் சேவை வருவாய் கட்டணம் அல்லாத) செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடுசெய்ய மேலும் உதவுகிறது.

மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோநகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்கிறது.

Tags

Next Story