மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த மகேஷ் பொய்யாமொழி

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டிற்கான நிதியை விரைந்து அளிக்கக் கோரி மத்திய கல்வித்துறை அமைச்சரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டிற்கான நிதியை விரைந்து அளிக்கக் கோரி மத்திய கல்வித்துறை அமைச்சரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால்(Project Approval Board) 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே அந்தத் தொகையை விரைவாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடுமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்த் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அப்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் குமரகுருபரன் இ.ஆ.ப, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி இ.ஆ.ப ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story