தமிழகம் வரும் மல்லிகார்ஜுன் கார்க்கே
மல்லிகார்ஜூனா கார்க்கே
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், இந்தியா கூட்டணியில் யாரேனும் இணைந்தால் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான வழக்கு தொடுக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வர உள்ளார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், பாஜக தமிழகத்தில் மலர வாய்ப்பு இல்லை என்றும் வறுமையை ஒழித்தது காங்கிரஸ் கட்சி தான், ஆனால் மோடி இருக்கும் வேலை வாய்ப்புகளை அழித்து வருகிறார்,இதுவரைக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கவில்லை என்றும் பேசினார்.
மேலும், மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருகிறார்கள் என்று பேசியவர், விஜயதரணி வேறு கட்சி இணைந்தது அவர்களின் உரிமை என்றார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பொருத்தவரை கூடிய விரைவில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கிறது என்று கூறினார். கலைஞர் நினைவிடத்திற்கு காங்கிரஸ் சார்பாக பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரிவித்தார்.
பாஜக முதலில் எல்லா கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும், நேற்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார். அவர் சொன்ன திட்டங்கள் இது வரையும் செயல்படுத்தவில்லை, உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார் மோடி. மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் மீது திடீரென பற்று வந்துள்ளது மோடிக்கு, அவர் இரண்டு நாள் பயணமாக தமிழத்திற்கு வந்து மக்களுக்கு அல்லவா கொடுத்திருக்கிறார் என்றார்.