சிற்பங்களைத் தொட்டு ரசித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயணிகள்

சிற்பங்களைத் தொட்டு ரசித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயணிகள்
சிற்பங்களை தொட்டு உணரும்  சுற்றுலா பயணியர்

ஜெர்மன் நாட்டில் இருந்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணியர் ஆறு பேர், மாமல்லபுரம் சிற்பங்களை ரசிக்க, நேற்று சுற்றுலா வந்தனர். மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து, வழிகாட்டிகளின் வாயிலாக அறிந்த அவர்கள், சிற்பங்களை கைகளால் தொட்டு உணர்ந்து ரசித்தனர். அவர்களை அழைத்து வந்த, தனியார் நிறுவன சுற்றுலா வழிகாட்டி கிறிஷ், பல்லவர் காலத்தில் சைவ, வைணவ மதங்கள் சிறந்து விளங்கியது குறித்தும், அதன் அடிப்படையில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டது குறித்தும் அவர்களிடம் விளக்கினார். ஒரே நீளமான பாறைக்குன்றில், ஐந்து வகை ரதங்கள் தனித்தனியே வடிக்கப்பட்டுள்ள விதம், அவற்றின் விமானங்கள், அங்குள்ள நந்தி, யானை, சிங்கம் உள்ளிட்ட சிற்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. பிரமாண்ட பாறைக்குன்றின் விளிம்பில் படைக்கப்பட்டுள்ள அர்ஜுனன் தபசு தொகுப்பு சிற்பங்கள், பாறைவெட்டு கற்களில் உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அவற்றின் சரித்திர பின்னணி குறித்து நுட்பமாக விவரிக்கப்பட்டது. சிற்பங்களை கைகளால் தொட்டு ரசித்த சுற்றுலா பயணியர், 1,500 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அவற்றின் பிரமாண்டத்தை அறிந்து வியந்தனர்.

Tags

Next Story