மணியனூர் அரசு தொழிலாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த அரசு பள்ளிக்கல்வி மூலம் சேலம் ஊரக ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காண மருத்துவ முகாம் சேலம் மணியனூர் அரசு பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையார் சங்கீதா ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ் எம் சி உறுப்பினர்கள் சிவகுமார், முருகன், சுப்ரமணி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எலும்பு, குழந்தைகள் நலம், மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வுமேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை, பராமரிப்பு மானிய அட்டை, இலவச பஸ் மற்றும் ரயில் பாஸ் வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுநர் பகிலத் பேகம், ராஜராஜன், சிறப்பாசிரியர்கள் கவிதா, சரண்யா, மருத்துவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.