இருளில் மூழ்கிய மாப்பிள்ளையூரணி பிரதான சாலை

தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் மின்விளக்கு இல்லாமல் வழிப்பறி மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை டேவிஸ் புரம் பகுதியில் பல மாதங்களாக மின்விளக்கு எரியாத காரணத்தால் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது முக்கிய சாலையான இந்த சாலையை ராமேஸ்வரம் செல்லும் ஏராளமானோர் இந்த பயன்படுத்துகின்றனர் மேலும் தருவைகுளம் வெள்ளப்பட்டி சிலுவைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இந்த வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் ஏற்பட்டு காயம் ஏற்படுகிறது.

மேலும் பெரும் விபத்து நடப்பதற்கு முன் இந்த சாலை மற்றும் தெரு விளக்கை பராமரிக்க வேண்டும் என பிஜேபி கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகையினால் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் மற்றும் பிஜேபியினர் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story