பள்ளி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி: இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி மாணவர்களுக்கான  மாரத்தான் போட்டி: இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் மாணவர்கள்

பள்ளி குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சேலத்தில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்காடு, ஆட்டையாம்பட்டி போன்ற பகுதிகளில் ஏழை எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு உதவியாக குழந்தைகளுக்கான மாராத்தான் போட்டி நடைபெற்றது.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாராத்தான் போட்டியை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மற்றும் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமையை திறன்பட வெளிப்படுத்தினர்.

வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story