மதிமுக- திமுக முதல் கட்ட ஆலோசனை
ஆலோசனையில் ஈடுபட்ட நிர்வாகிகள்
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது அந்த நிலையில் தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று திமுக-வின் கூட்டணி கட்சியான இருக்ககூடிய மதிமுக கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த முதல் கட்ட ஆலோசனையில் மதிமுக தேர்தல் குழுவாக நியமிக்கப்பட்டுள்ள கழக அவைத் தலைவர் அர்ஜூனராஜ், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அரசியல் ஆய்வு மைய செயலாளர் ரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் திமுக தேர்தல் குழுவினரை சந்தித்தனர்.