அண்ணாமலை தனது உழைப்பை வீணடித்துக் கொண்டிருக்கிறார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ

அண்ணாமலை தனது உழைப்பை வீணடித்துக் கொண்டிருக்கிறார்  மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ

அண்ணாமலை தவறான சித்தாந்ததற்காக இயக்கத்திற்காகத் தனது உழைப்பை வீணாகிக் கொண்டிருக்கிறார் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தனது பேட்டியில் கூறுகையில் தூத்துக்குடி ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச்சு சம்பவம் தவறான சம்பவம் கண்டிக்கத்தக்கது கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு அதற்காக வன்முறையை கையில் எடுக்கக் கூடாது குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும மதரீதியாக ஜாதி ரீதியாக சர்ச்சைகள் கிளம்பும் போது தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படுகிறது இதன் காரணமாக சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் தொடர்ந்து ஆளுநர் தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளை மதிக்கவில்லை என்று கூறுவது தவறானது ஆளுநர் தனது உரையில் சட்டசபையில் காமராஜர் பெயரை கூட விட்டுவிட்டார் சுதந்திர போராட்ட தியாகி சங்கரையாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி சார்பில் வழங்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை ஆளுநர் காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சங்கரயா ஆகியோருக்கு வழங்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை தேசப்பிதா யார் மகாத்மா காந்தி மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு கொடி பிடித்தவர் யார் அந்த மாதிரி இயக்கங்களுக்கு ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் எனவே அவருக்கு சுதந்திரப் போராட்டத்தை பற்றியோ சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றியோ கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல் இப்படித்தான் இருக்கிறது இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள் ஆளுநர் மாளிகைக்கு பதவியேற்பதற்கு முன்பாக வகுப்பு எடுக்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளார் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் ஆளுநரை பதவியை எடுக்க வேண்டும் என்பது கிடையாது அரசியல் அமைப்பு சாசன சட்டத்தில் கூறியுள்ள கடமைகளின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் உதாரணமாக டிஎன்பிசி தலைவராக சைலேந்திரபாபு பதவி ஏற்க ஆளுநர் இடைஞ்சலாக இருந்து வருகிறார் சைலேந்திர பாபு எப்படிப்பட்ட அதிகாரி என்பது மக்களுக்கு தெரியும் அப்படிப்பட்ட நபருக்கு இந்த பொறுப்பிற்கு வந்தால் துறை நன்றாக செயல்படும் என்று அரசு முடிவு எடுத்து வழங்க இருந்தது அதற்கு ஆளுநர் தடையாக இருந்து வருகிறார் தொடர்ந்து ஆளுநர் எதிராக செயல்பட்டு வருகிறார் இந்தியா கூட்டணி ஐந்து மாநில தேர்தல் மற்றும் இல்லாத பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பாரத் என்று கொண்டு வருவது திசை திருப்பும் முயற்சி இன்று நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இது திசை திருப்பும் வகையில் பாரத் என்ற சர்ச்சை கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் இப்போது ஆரியம் திராவிடம் என்ற ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது மொத்தத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் ஆரியர் திராவிட சர்ச்சையே அவர்கள் கொண்டு வந்ததுதான் குறிப்பாக ஆரியம் திராவிடம் பாரத் ஜாதி மத ரீதியான சர்ச்சைகளை சாதிய மத ரீதியான இயக்கங்கள் கொண்டு வருகின்றன தேவையில்லாத சர்ச்சைகள் இருக்கக் கூடாது இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் ராகுல் காந்தி பிரதமர் என்பது மாற்று கருத்து கிடையாது இந்தியா கூட்டணியின் இலக்கு யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் எங்களது இயக்கம் சார்பில் ராகுல் காந்தியை தான் பிரதமராக கூறுவோம் தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்ற தமிழர் பிரதம மந்திரி ஆனால் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டியது ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இப்போது வட மாநில இயக்கங்களின் சர்ச்சையை தீர்ப்பதற்கு தான் தற்போது பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனக்கு தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை மேலும் கட்சித் தலைமை இயக்க தோழர்கள் அந்த நேரத்தில் முடிவு எடுக்கும் பட்சத்தில் போட்டியிடுவேன். அண்ணாமலை நல்ல அதிகாரியாக செயல்பட்டார் நன்றாக இருந்தார் ஆனால் தவறான சித்தாந்ததற்காக இயக்கத்திற்காகஅவரது உழைப்பு வீணாகி கொண்டிருக்கிறதுஅவர் தற்போது தவறான இயக்கத்தில் சேர்ந்து உள்ளார் அண்ணாமலை போன்ற தலைவர்களை மூளை சலவை செய்து அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றுள்ளனர். என்றார்

Tags

Read MoreRead Less
Next Story