பம்பரம் சின்னம் வழக்கு : எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது - நீதிமன்றம்
பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்தால் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது சின்னங்கள் பட்டியலிலும் பம்பரம் சின்னம் இல்லை, பம்பரம் சின்னத்தில் எந்த கட்சியும் போட்டியிடவும் இல்லை, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னங்கள் அனைத்தும் வரும் 30 ஆம் தேதி போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், அதன் பின் மார்ச் மாதமும் பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதிமுக கட்சி முந்தைய தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன் அடிப்படையில் தான் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்கிறோம் என்று மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story