கனடா துணை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

கனடா துணை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
X
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கனடா துணை அமைச்சர்
கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தின் குழந்தைகள் மற்றும் சமூக சேவைகள் துணை அமைச்சர் லோகன் கணபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தின் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் சமூக சேவைகள் துணை அமைச்சர் லோகன் கணபதி, ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

அப்போது, ஒண்டாரியோ மாகாணத்தின் கௌரவ இலச்சினையை கழகப் பொதுச் செயலாளருக்கு அணிவித்தார். இச்சந்திப்பின்போது, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K. சிவாஜிலிங்கம், சன் மாஸ்டர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story